உள்ளூர் செய்திகள்

வெட்டுமடை பகுதியில் அனுமதியின்றி மணல் திருடிய வாலிபர் கைது

Published On 2023-10-25 07:40 GMT   |   Update On 2023-10-25 07:40 GMT
  • 3 டெம்போக்கள் பறிமுதல்
  • மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர்.

குளச்சல்:

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான வெட்டுமடை பகுதியில் அனுமதியின்றி கனிம வளம் மண்கள் திருடி செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று மணல் ஆலை மேற்பார்வையாளர் சிவசங்கர் (வயது 50) மற்றும் ஊழியர்களுடன் வெட்டு மடை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றார். அப்போது 3 டெம்போக்களில் ஒரு ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இவர்களை பார்த்ததும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர். இதுகுறித்து சிவசங்கர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 டெம்போக்கள் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் ஜே.சி.பி. டிரைவர் காரங்காடு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News