உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி திருவிழாவின் 6-வது நாளையொட்டி குமரியில் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

Published On 2023-11-17 08:54 GMT   |   Update On 2023-11-17 08:54 GMT
  • நாளை நடக்கிறது
  • இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 38-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு நிர்மால்யபூஜையும் 7.30 மணிக்கு சிறப்பு வழி பாடும். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும்8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

6-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது.8மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதேபோல கன்னியா குமரி மறக்குடி தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான நாளை முதல் முறையாக இந்த கோவிலில் சூரசம்கார விழாநடக்கிறது.மேலும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News