உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே தொழிலாளி மாயம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை.
களியக்காவிளை :
களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை. தனது தம்பி வீட்டில் வசித்து வந்த அவர், சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு சென்றுள்ளார்.
அதன் பிறகு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.