உள்ளூர் செய்திகள்

மேலகிருஷ்ணன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

Published On 2023-07-16 12:18 IST   |   Update On 2023-07-16 12:18:00 IST
  • அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் படுகாயம்
  • சுசீந்திரம் போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கன்னியாகுமரி :

ஈத்தாமொழி அருகே புத்தன் துறையை சேர்ந்தவர் பனிமய சசிங்டன் (வயது 53). இவரது மனைவி நிந்து (42). இவரது தாயார் வீடு கன்னியா குமரியில் உள்ளது.

கணவன்-மனைவி இருவரும் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மணக் குடி-ஈத்தாமொழி சாலையில் இருவரும் வந்து கொண்டி ருந்தனர். புத்தன் துறை மிக்கேல்தெருவை சேர்ந்த ஜோயல் (16) என்பவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தங்கை ஜெரூஸ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜோயல் தனது தங்கை ஜெரூசை மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு அழைத்து சென்றார். மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன் னால் சென்ற டெம்போ ஒன்றை முந்தி சென்றபோது எதிரே வந்த பனிமயசசிங்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பனிமய சசிங்டன், நிந்து, ஜோயல், ஜெரூஸ் ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாய மடைந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே நிந்து பரிதா பமாக இறந்தார்.

மற்ற 3 பேரும் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெரூசை திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான நிந்துவின் உடல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கே திரண்டு உள்ளனர். கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.

உயிரிழப்புகளும் அதிக அளவு நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியை தீவிரப்படுத்துவது டன் அதிவேகமாக வாகனம் ஓட்டுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விபத்து நடந்த பகுதிகளில் தற்காலிக தடுப்பு வேலிகளை வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News