உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
ஆரல்வாய்மொழியில் தீக்குளித்து பெண் தற்கொலை
- இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்தது
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது50). இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீ வேகமாக பரவ அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.