உள்ளூர் செய்திகள்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தன்னார்வல தொண்டர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-09-28 15:20 IST   |   Update On 2022-09-28 15:20:00 IST
  • பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நடந்தது
  • முதல் கட்டமாக 60 தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து பேரிடர் கால தன்னார்வ தொண்டர்களுக்கான "பேரிடர் கால நண்பன்" (ஆப்தமித்ரா) திட்டபயிற்சியை பயிற்சியை கன்னியாகுமரியில் 12நாட்கள் நடத்துகிறது. 2-ம் கட்ட பயிற்சியின் தொடக்க விழா ஒருங்கிணைந்த தேசிய பேரிடர் பயிற்சி மைய இயக்குனர் சோனியா தலைமையில் நடந்தது. குமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்துபேசினார்.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாரதி, அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர் பிரபா, ஜெயினி மற்றும் சேது பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக 60 தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News