உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள்-கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்

Published On 2023-04-17 07:21 GMT   |   Update On 2023-04-17 07:21 GMT
  • 168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடற்கரை சாலையில் நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன
  • 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடற்கரை சாலையின் இரு புறமும் உள்ள நடை பாதைகளில் ஏராளமான வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தீர்க்க 168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடற்கரை சாலையில் நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

தற்போது இந்த கடைகளை ஏலம் நடத்தி வியாபாரிகளுக்கு கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும் அந்த இடத்தில் அதே வியாபாரிகளுக்கு கடையை மீண்டும் வழங்க கோரியும் 150-க்கும் மேற்பட்ட தள்ளு வண்டி வியாபாரிகள் இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. கவுன்சிலர் சுபாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர் நித்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News