உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர இன்று கடைசி நாள் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-02-28 06:47 GMT   |   Update On 2023-02-28 06:47 GMT
  • 5,063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி
  • கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் சுமார் 5,063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய் யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய வற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இந்த திட் டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 182 பிரீமியமாக செலுத்தி ரூ.83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடாகவும் பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவ னங்களுக்கு செலுத்த லாம். கடன் பெறா விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.

இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும். குமரி மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவ சாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். மேலும் இதுதொடர்பான விவரங் களுக்கு வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News