உள்ளூர் செய்திகள்

தோவாளை பூ சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2022-10-02 07:29 GMT   |   Update On 2022-10-02 07:29 GMT
  • சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூடினர்
  • போட்டி போட்டு பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ் பெற்ற பூச் சந்தை உள்ளது. ஆரல் வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், புதியம புத்தூர், மாடநாடார் குடி யிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து ஆரளி, மஞ்சள் ,கிரோந்தி, தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து துளசியும், பச்சை, கொடை ரோடு, சங்கரன்கோவில், மானா மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதி களிலிருந்து மல்லிகைப்பூ வும், தோவாளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, தாமரைய, கோழி பூ ஆகிய பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்த பூக்கள் விற்பனையாகி குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்கிறது. ஆயுத பூஜை மற்றும் தசரா விழாவை முன்னிட்டு வியாபாரிகளும், பொது மக்களும், பக்தர்களும் போட்டி போட்டு பூக்கள் வாங்கி செல்கிறார்கள். பிச்சிப்பூ ரூ.750, மல்லிகைப்பூ ரூ.800, அரளி ரூ.320, சம்மங்கி ரூ,150, கொழுந்து ரூ.130, கிரேந்தி ரூ.110, மஞ்சள் குறைந்து ரூ.90 மற்ற பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும் போது, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவி ழாவை முன்னிட்டு பூக்களின் விலை மேலும் அதிக ரிக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News