உள்ளூர் செய்திகள்

ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்க இருக்கும் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் சீரமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-09-05 08:04 GMT   |   Update On 2022-09-05 08:04 GMT
  • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
  • காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.

கன்னியாகுமரி:

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு தேசிய ஒற்றுமை பயணம் என்ற பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கு கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது. காந்தி நினைவு மண்டபத்தில் ஆங்காங்கே உடைந்து உள்ள பகுதியை சிமெண்ட் பூசி சீரமைக்கும்பணியும் நடந்துவருகிறது.

Tags:    

Similar News