உள்ளூர் செய்திகள்
சுங்கான்கடையில் மழையால் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்
- நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.
- சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணியல் :
சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்பேத்கர் காலனி, இந்திரா காலனி மற்றும் சுங்கான் கடை சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.
இந்த நிலையில் சாலை யோரம் நின்ற மரம் மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. குறிப்பிட்ட ஒரு வளைவு பகுதியில் இந்த மரம் சரிந்து விழுந்ததால் கன மழையில் சாலை அரித்துச்செல்லப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.