கலைஞர் உரிமை திட்டத்திற்கு குமரியில் இன்று 784 இடங்களில் சிறப்பு முகாம் விடுபட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்
- உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
- 364 முகாம்களில் விண்ணப்ப படிவுகள் பெறப்பட்டது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. முதல் கட்ட முகாம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாக்களில் உள்ள 400 இடங்களில் நடந்தது.
3,04,414 விண்ணப்பபடிவுகள் வழங்கப்பட்டது. அதில் 2,03,268 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. 1 லட்சத்து 146 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் வழங்கவில்லை. இந்த நிலையில் 2-ம் கட்ட முகாம் கடந்த 5-ந்தேதி முதல்
13-ந்தேதி வரை திருவட்டார், கிள்ளியூர், கல்குளம் தாலுகாக்களில் நடந்தது. 364 முகாம்களில் விண்ணப்ப படிவுகள் பெறப்பட்டது.
2 லட்சத்து 72 ஆயிரத்து 782 கார்டுதாரர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்பப்பதிவுகளை பூர்த்தி செய்து வழங்கினார்கள். 79 ஆயிரத்து 30 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கவில்லை.
குமரி மாவட்டத்தில் 5,07,682 ரேஷன் கார்டுதாரர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 20 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
1 லட்சத்து 80 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்ட 784 இடங்களிலும் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. ஏற்கனவே கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்காத பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். சிறப்பு முகாம்களில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. நாளையும், நாளை மறுநாளும் முகாம் நடக்கிறது.
எனவே விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வழங்காத தகுதியான நபர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்குமாறு அதிகாரிகள் கேட் டுக்கொண்டு னர். பூர்த்தி செய்து விண்ணப்பபடிவங்களை வழங்க செல்லும் விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் இணைப்பு கார்டு ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்