உள்ளூர் செய்திகள்

முட்டம் மீனவர் கிராமத்தில் நடந்த தாய் -மகள் கொலையில் கைதானவர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு - கலெக்டர் அரவிந்த் நடவடிக்கை

Published On 2022-08-01 09:41 GMT   |   Update On 2022-08-01 09:41 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகையும் கொள்ளையடிக்கப்பட்டது
  • இதுவரை குண்டச்சத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 50 ஆனது.

நாகர்கோவில் :

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ரோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).

இவரது தாயார் தெரசம்மாள். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கடியபட்டணத்தைச் சேர்ந்த அமல சுமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமல சுமன் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அமல சுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அமல சுமன்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அமல சுமனை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குண்டச்சத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 50 ஆனது.

Tags:    

Similar News