உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும்

Published On 2023-08-17 12:29 IST   |   Update On 2023-08-17 12:29:00 IST
  • குமரி மாவட்ட அறங்காவலர் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
  • சிறமடம் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் தலைமை அலுவல கத்தில் நடந்தது.

அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்கு மார், துளசிதரன்நாயர், குமரி மாவட்ட திருக்கோவில் களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ் தேவசம் மரமத்து பிரிவு பொறியாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

கூட்டத்தில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு புதிய உறுப்பி னர்களை தேர்வு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நீண்ட காலமாக கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருக்கும் சுசீந்திரம் தாணுமா லயன்சாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி களை விரைவில் செய்வ தற்கான ஆயத்த பணிகளை நிறைவேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்வது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களின் தேர்களுக்கு கொட்டகை அமைப்பது. வெள்ளிமலை பாலசுப்பிர மணியசுவாமி கோவிலில் கொடிமரம் நாட்டுவதற்கும் அதற்கான கொடிமர பிர திஷ்டை பூஜைகள் செய்வது குறித்தும் ஆணையரிடம் அனுமதி பெறுவது.

பூதப்பாண்டி தேவசம் தொகுதிக்கு உட்பட்ட சிறமடம் எம்பெருமாள் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது. அதைத் தொடர்ந்து கோவில்களில் உள்ள மராமத்து பணிகளை துரிதமாக செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திருக்கோவில் நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகள் வாசித்து கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது.

Tags:    

Similar News