உள்ளூர் செய்திகள்

தாழக்குடியில் அழகம்மன் கோவிலில் ரூ.3 லட்சத்தில் சோலார் மின் விளக்கு

Published On 2023-11-08 12:43 IST   |   Update On 2023-11-08 12:43:00 IST
  • தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.
  • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

ஆரல்வாய்மொழி :

தாழக்குடியில் அழகம்மன்ஜெயந்திஸ்வரர் ஆலயத்தில் ரூ.3 லட்சம் செலவில் சோலார் மின்விளக்கு பொருத்தப் பட்டது. இதை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தாழக்குடி பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார்,துணைத் தலைவர் ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், வார்டு உறுப்பினர்கள் ரவிபிள்ளை, ரோகினி அய்யப்பன், சுரியபார்வதி, பாக்கியம், அழகம்மாள், ஜெயந்தி தி.மு.க. நிர்வாகிகள் சங்கர், வாரன், முத்துகிருஷ்ணன், பொறியாளர் ராஜ்குமார், சர்வேயர் அய்யப்பன், ஓய்வுபெற்றகண்காணிப்பாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.அறங்காவலர் குழு தலைவர் கூறும்போது இன்னும் சில மாதங்களில் தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News