உள்ளூர் செய்திகள்

மிடாலத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கிராமசபை கூட்டம்

Published On 2023-10-03 07:42 GMT   |   Update On 2023-10-03 07:42 GMT
10 சக்கர கனரக லாரிகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி தீர்மானம்

மார்த்தாண்டம் :

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுமக்கள் சார்பில் குமரி மாவட்ட சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்வதால் சாலைகள் பழுதடைவதாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது. மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளதால், குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் 10 - சக்கரங்களுக்கு மேலான கனிம வள லாரிகளை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.

கிராம சபை கூட்டத்தில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், ஊராட்சி ஒன்றிய கவுன்சில் விஜயராணி, மற்றும் சுகாதார துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மின்சார வாரியம், ரேஷன் கடை ஊழியர்கள், அரசு செவிலியர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News