உள்ளூர் செய்திகள்

விதை உற்பத்தி செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Update: 2022-09-27 07:48 GMT
  • வேளாண் அதிகாரி விளக்கம்
  • விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத்தப்படும்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப் பண்ணைக்கு பயன் படுத்தும் விதைக்குரிய ஆதாரம் மற்றும் விதை வாங்கியதற்கான ரசீதுடன் உரிய படிவத்தில் விதைப்பு அறிக்கைகள் தயார் செய்து, உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

விதை உற்பத்தி செய்து சான்று பெற விரும்பும் விவ சாயிகள் நாகர்கோவிலில் உள்ள விதைச்சான்று மற் றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விதைப்பண்ணை வயல்களில் அனைத்து தொழில் நுட்பங்களும் தவறாது கடைபிடிக்கப்பட வேண் டும். பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகள் விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு மேற் கொள்ளப்படும்.

அறுவடை நிலையிலும் விதைச்சான்று அலுவலரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வயல்மட்ட விதைகள் சுத்திக ரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்திட அனுமதி வழங்கப்படும். பின் சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிக்கப்பட்டு விதைத்தரம் அறிவதற்கு விதை மாதிரிகள் எடுத்து விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப்படும்.

விதை ஆய்வு முடிவின் அடிப்படையில் விதைக ளுக்கு சான்றட்டை பொருத் தப்படும். இந்த சான்றட்டை பொருத்திய விதைகளை விவசாயிகள் தாங்களே பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவதோடு, இதர விவசாயிகளுக்கும் இந்த தரமான விதைகளை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News