உள்ளூர் செய்திகள்

விளைநிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-06-19 08:04 GMT   |   Update On 2022-06-19 08:04 GMT
  • யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
  • யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டி அருகே உள்ள மலையடிவார பகுதிகளில் யானைகள் போன்ற வனவிலங்குகள் ஆண்டு தோறும் விளைநிலங்களில் புகுந்து பயிர்கள், வாைழ மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒரு சில நாட்களுக்கு முன்பாக பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி, உடையார்கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் யானைக்கூட்டம் புகுந்து சுமார் 1000 வாழைகளை பிடுங்கி நாசப்படுத்தி உள்ளது. மேலும் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து 18 தென்னை மரங்களையும் நாசப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற யானைகளின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருகிறது.

எனவே வனத்துறையினர் தனிக்கவனம் செலுத்தி யானைகள் விளை நிலங்களில் வராமல் இருப்பதற்கு அகழிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்தால் அதனை விரட்டுவதற்கு தேவையான அனைத்து உத்திகளையும் வனத்துறையினர் கையாள வேண்டும். தற்போது யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News