உள்ளூர் செய்திகள்

சுருளோடு ஊராட்சியில் புதிய ரேசன் கடை திறப்பு

Published On 2023-10-29 07:54 GMT   |   Update On 2023-10-29 07:54 GMT
  • மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை
  • ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.

திருவட்டார் :

சுருளோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மனோதங்கராஜ் ஏற்பாட்டில் அந்த பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புதிய ரேசன் கடையை சுருளகோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலாசுரேஷ் தலைமையில் வார்டு உறுப்பினர் சாந்தி முன்னிலையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.

நிகழ்ச்சியில் பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News