உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி பகுதிகளில் காற்றாலைகளில் திருடியவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு

Published On 2023-03-29 06:49 GMT   |   Update On 2023-03-29 07:13 GMT
  • காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது
  • போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி, குமாரபுரம், செண்பகராமன்புதூர், முப்பந்தல் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக இங்குள்ள சில காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது. இது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலை யில் ஆரல்வாய்மொழி-குமாரபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 காற்றாலைகள் இரவு முழுவதும் ஓடியது.

அதிகாலையில் மேலாளர் ராபர்ட் ஜான், காற்றாலையை சுற்றிப் பார்த்தபோது காற்றாலை ஓட வில்லை. இது தொடர்பாக அவர் விசாரித்த போது காற்றாலை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதும் உள்ளே இருந்த விலை உயர்ந்த கேபிள் வயர்களை திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டது ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு யேசுவடியான் மகன் ஜெகன் மற்றும் பாபு என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார், ஜெகனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். காற்றாலை திருட்டு சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.

Tags:    

Similar News