உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை நிறை புத்தரிசி பூஜை

Published On 2022-08-03 07:21 GMT   |   Update On 2022-08-03 07:21 GMT
  • கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

கன்னியாகுமாரி:

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை (4-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை இந்த கோவிலில் நடைபெறுகிறது. நாளை காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலைய அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News