உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2023-11-16 06:50 GMT   |   Update On 2023-11-16 06:50 GMT
  • திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.
  • திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.

கன்னியாகுமரி :

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தனிப்படகில் சென்றார். அங்கு வந்த அவரை பள்ளி மாணவிகள் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவள்ளுவர் சிலையின் கால்பாதம் வரை ஏறி சென்று பார்வையிட்டார். அங்கு விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.

கீழ்தளத்தில் உள்ள அறப்பீடமண்டபத்தில் எழுதப்பட்டிருந்த சில முக்கியமான திருக்குறளை படித்து மகிழ்ந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News