உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் மறைசாட்சி தேவ சகாயம் புனிதர் பட்ட நினைவு திருப்பலி

Published On 2023-05-13 06:53 GMT   |   Update On 2023-05-13 07:17 GMT
  • இன்று முதல் 15-ந்தேதி வரை நடைபெறும்
  • புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் புகழ் மாலை மலை வலம் சிறப்பு நற்கருணை பவனி

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டம் நினைவு திருப்பலி இன்று முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆரல்வாய் மொழி காற்றாடி மலையில் காத்து கரம் பிடிக்கும் தேவசகாயம் வளம் தந்து வாழ்வளிக்கும் வியாகுல மாதா இரட்டை திருத்தலம் உள்ளது. இந்தி யாவின் முதல் மறைசாட்சி தேவ சகாயம் கடந்த ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதம்மாக தேவ சகாயம் வீர மரணம் அடைந்த புண்ணிய பூமி ஆன காற்றாடி மலையில் நினைவு திருப்பலி இன்று மாலையில் ஜெபமாலை புகழ்மாலை மாலை ஆராதனை நடைபெறும். இரண்டாவது நாள் திருப்பலி புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் புகழ் மாலை மலை வலம் சிறப்பு நற்கருணை பவனி நடைபெற உள்ளது.

மூன்றாவது நாள் தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி மறை மாவட்ட ஆயர் தலைமையில் தேவா மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா புதிய மன்னா வீடு அடிக்கல் நாட்டு விழா ஜெபமாலை புகழ்மாலை புனிதர் பட்ட நினைவு நன்றி திருப்பலி புனிதரின் திரு சப்பரபவனி நடைபெற உள்ளது .

திருவிழா ஏற்பாடுகளை தேவ சகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பங்குத் தந்தை பங்கு பேரவை நிர்வா கிகள் அருள் சகோத ரிகள் பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News