உள்ளூர் செய்திகள்

வின்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சி முகாம்

Published On 2023-09-24 12:54 IST   |   Update On 2023-09-24 12:54:00 IST
  • 40 பள்ளிகளில் இருந்து 160 ஆசிரியர்கள் பங்கேற்பு
  • அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக கற்றலை மேற்கொண்டனர்.

நாகர்கோவில் :

குமரி, நெல்லை, தூத்துக் குடி, சி.பி.எஸ்.இ பள்ளி களின் கூட்டமைப்பான தக்க்ஷின் சஹோதயா தென்மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிலரங்கத்தை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தியது. பள்ளியின் நிறு வனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கினார். வின்ஸ் பள்ளி முதல்வர்டாக்டர் பீட்டர் ஆண்டனி சுரேஷ் வர வேற்றுப் பேசினார். டாக்டர் பினு மோன் பயிற்சியாளரை அறிமுகப்ப டுத்தி திருவனந்தபுரம் சிறப்பு பயிற்சியாளர் டாக்டர் பிஜுதாமஸ் பயிற்சியளித்தார்.

தொடக்க நிலை மாணவ - மாணவியரின் அறிவுத்திறனை மெருகூட்டும் வகையில் கற்பித்தலை மேற்கொள்வது, மதிப்பீட்டு வழிமுறை, கல்வி தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையை அனைத்து கோணங்களிலும் ஆசிரியர்களுக்கு விழிப்பு ணர்வுடன் கூட அதனை செயல்படுத்தும் வழிமுறை களும் இந்த பயிலரங்கத்தில் கற்பிக்கப்பட்டது. குழந்தை களுக்கு எளியமுறையில் ஆடிப்பாடி கற்பிப்பது குறித்து பல்வேறு குழு விளையாட்டுகள் பாடல்கள் நடனங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியாக பயிலரங்கத்தில் கற்றலை மேற்கொண்டனர்.

சி.பி.எஸ்.இ. பள்ளி தொடக்க நிலைஆசிரியர்க ளுக்கு இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாற அனுபவ வழிகற்றல் மற்றும் கற்பித்தல் கலைகளை மேம்படுத்தும் வகையில் இந்த இருநாள் திறன் வளர் பயிற்சி முகாம் நடை பெற்றது.

பயிற்சியினை வின்ஸ் பள்ளியின் செய லாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் மற்றும் கூட்ட மைப்பின் செயலாளர் டாக்டர் ஸ்ஓஹரா குஸைன் ஒருங்கிணைத்திருந்தனர். தக்க்ஷின் சஹோதயா கூட்டமைப்பின் பொரு ளாளர் மஞ்சு ராஜேஷ் நன்றி உரையாற்றினார். வின்ஸ் சி.பி.எஸ்.இ. ஆசிரியர் ஜெகன் பிரிட்டோ நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட 160 ஆசிரியர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News