உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-07-05 15:16 IST   |   Update On 2023-07-05 15:16:00 IST
  • வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.
  • வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது

நாகர்கோவில் :,

குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள், உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பு தலைவர் நந்தகுமார் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ஜெயச்சந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சுரேஷ், சுந்தர் சிங், ஜோசப் ராஜ், பழனி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆதி லிங்கம், மூத்த வழக்கறி ஞர்கள் ராஜ குஞ்சரம், பரமதாஸ், வெற்றிவேல், ஜோசப் பெனடிக், ராதா கிருஷ்ணன், மரிய ஸ்டீபன், செல்வகுமார் , வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சரவணன், அனிதா ராஜன், ஜாக்குலின் ஆஷா, கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரேம்குமார், சுரேஷ் தங்கம் , முருகேஸ்வரன் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர் . மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News