உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

சந்திரகிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை நடை அடைப்பு

Published On 2022-11-08 07:49 GMT   |   Update On 2022-11-08 07:49 GMT
  • இரவு 7.45 மணிக்கு பரிகார பூஜைகள் நடத்தி மீண்டும் திறக்கப்படுகிறது
  • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News