உள்ளூர் செய்திகள்

கொட்டாரத்தில் 500 மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் புத்தகம்

Published On 2023-07-15 12:42 IST   |   Update On 2023-07-15 12:42:00 IST
  • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வழங்கினார்
  • 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக இன்று காலை கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி :

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அ மைச்சர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக இன்று காலை கொண்டாடப்பட்டது. விழாவில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். காமராஜரின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 500 மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் பிறந்த நாள் விழாவை யொட்டி மாலைமலர் வெளியிட்ட சிறப்பு புத்தகத்தை ஒன்றிய செயலாளர் பாபு வழங்கினார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணைத் தலைவி விமலா, கவுன்சிலர் செல்வன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், தமிழ்மாறன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, முன்னாள் தலைமை ஆசிரியர் பால்நாடார், மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News