உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 67 மின்னணு எந்திரங்கள்-136 கட்டுப்பாட்டு கருவிகள் பழுதாகி உள்ளன

Published On 2022-06-15 09:54 GMT   |   Update On 2022-06-15 09:54 GMT
  • ஆய்வுக்குப் பிறகு தகவல்
  • 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் குமரி மாவட்ட த்தில் திங்கள்நகர் மற்றும் தோவாளை தாலுகா அலுவலகங்களில் பாது காப்பாக பூட்டி சீல் வைக்க ப்பட்டுள்ளன.

தற்போது 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுது ஏற்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை சரி செய்யும் வகையில் பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களாக திங்கள்நகரில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அதில் குறைபாடு உள்ள எந்திரங்களை தனியாக பிரித்து வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று தோவாளையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடை பெற்றது. தேர்தல் தாசில்தார் சுசிலா முன்னிலையில் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 7270 மின்னணு எந்திரங்களில் 67 மின்னணுஎந்திரங்கள் பழுது ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை அதிகாரிகள் தனியாக வைத்துள்ளனர். இதேபோல் 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

மேலும் 4789 வி.வி.பேட் எந்திரத்தில் 3451 எந்திரங்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த எந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவன த்துக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News