உள்ளூர் செய்திகள்

குலசேகரத்தில் மது போதை தகராறில் சானலில் தள்ளி தொழிலாளி கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2022-12-08 06:50 GMT   |   Update On 2022-12-08 07:09 GMT
  • ஜஸ்டின் வீட்டிலிருந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கி டையே வாய்தகராறு ஏற்பட்டது
  • புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், செல்வன் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு

கன்னியாகுமரி :

குலசேகரம் அருகே செருப்பாலூர் அரமன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 46), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இரும்புலி பகுதி யைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32), திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (32).

இவர்கள் 3 பேரும் நண்பர்கள். ராஜேஷும் செல்வனும் ஜஸ்டின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். இவர்கள் ஒன்றாக ஜஸ்டின் வீட்டிலிருந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஷ், செல்வன் இருவரும் ஜஸ்டினை வீட்டின் பக்கத்தில் உள்ள கால்வாயில் பிடித்து தள்ளினார்கள்.

இதில் ஜஸ்டினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜஸ்டினின் உறவினர் அனீஸ் குலசே கரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், செல்வன் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.குலசேகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News