உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பிரபல நகைகடையில் 2-வது நாளாக போலீசார் ஆய்வு மோசடி புகார் குறித்து விசாரித்தனர்

Published On 2023-10-20 10:27 GMT   |   Update On 2023-10-20 10:27 GMT
  • 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது.
  • கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது

நாகர்கோவில் : திருச்சியை தலைமை யிடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான அறி விப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டி தொகை மாதந்தோறும் வழங்கப்பட்ட நிலையில். கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது.

அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட் டாளர்கள் நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையில் அந்தக் கடை திடீரென மூடப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்த னர்.

அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் நகை கடையின் 11 கிளைகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோ வில் கிளையில் பொருளா தார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா,சப்-இன்ஸ்பெக்டர் கள் மேரி அனிதா, இசக்கித்தாய் மற்றும் போலீ சார் நேற்று மாலை சென்றனர்.அவர்கள் கடை ஊழியர்களை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு, கடையில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

இன்று 2-வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் ஆய்வினை தொடர்ந்தனர். கடையில் இருப்பு உள்ள நகைகள், கணக்கு விவரங்கள், முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News