உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Published On 2023-07-17 12:34 IST   |   Update On 2023-07-17 12:34:00 IST
  • காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது
  • விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளரும் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபருமான அருட்பணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, இணை பங்குத்தந்தை நிக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பிரேஸ்லின் மனோ வரவேற்று பேசினார்.

காமராஜரை பற்றி பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மேல்நிலைப்பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் உபால்டு பரிசுகளை வழங்கி பேசினார். இணை பங்குதந்தை நிக்சன் உயர்நிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார். இடைநிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சகாய மல்லிகா இடைநிலை பள்ளிக்கான பரிசுகளை வழங்கினார்.

பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் மாணவி ஏஞ்சலின் ஸ்வீட்லி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்றத்தார் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை மாணவி ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார்

Tags:    

Similar News