களியக்காவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
- தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக
- சாலையில் விட்டு விட்டு தப்பியோட நினைத்தார்
நாகர்கோவில் : தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீசார் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி கூண்டு கட்டிய மினி லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்வதற்காக நிறுத்திய போது ஓட்டுநர் வாகனத்தை சாலையில் விட்டு விட்டு தப்பியோட நினைத்தார் சுதாரித்து கொண்ட போலீ சார் டிரைவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பாற சாலை பகுதியை சார்ந்த அனில் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மினி லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இந்த ரேசன் அரிசி பணக்குடியில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து வாக னத்தையும் ஓட்டுநரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் ஓட்டுநரி டம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த கடத்தல் மினி லாரியையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.