உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மாவட்ட கேரம் போட்டி - கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2022-07-05 07:51 GMT   |   Update On 2022-07-05 07:51 GMT
  • 1 முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிப்பவர்கள் இளநிலை பிரிவிலும், 6 முதல்12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.
  • சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் 12-ந் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டங்கத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் 1-வது வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் இளநிலை பிரிவிலும், 6-வது வகுப்பிலிருந்து 12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் நடைபெறும். இளநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.125 மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250 வீதமும், ரொக் கப்பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மேலும் முதுநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500, மூன்றாம் இடம் பெறுபவர் களுக்கு ரூ. 250 மற்றும் இரட் டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், ரொக்கப் பரிசுத் தொகையும் சான்றிதலும் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் District Level Carrom Competition என்பதனை சொடுக்கி (கிளிக்செய்து) தங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் புகைப்படம். கையொப்பம் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து உண்மைச் சான்றிதழினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு 04652 262060 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அள விலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுபவர்.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News