உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி மைதானத்தில் ஆழ்கடல் குகை மீன்கள் - வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

Published On 2023-09-16 07:44 GMT   |   Update On 2023-09-16 07:44 GMT
  • மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
  • சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

என்.ஜி.ஓ.காலனி :

நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதைமடம் மாநகராட்சி மைதானத்தில் மதுரை எம்.கே.சி. நிறுவனத்தாரின் ஆழ்கடல் குகை மீன்கள் பிரமாண்ட கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

திறப்பு விழாவில் எம்.கே.சி. நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பொருட்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொருட்கா ட்சி அரங்கத்தில் வைக்கப்ப ட்டிருந்த செல்பி பாயிண்டுகள், ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி அரங்கம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் கடைகள் பகுதி, பொழுதுபோக்கு ராட்டினம் பகுதி ஆகி யவற்றை பார்வையிட்டார்.

விழாவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல குழு தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஐவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சதாசிவம், கவுன்சிலர்கள் ஜெயராணி, ரோசிட்டா திருமால், ரமேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பொருட்காட்சி குறித்து அதன் உரிமையாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

மதுரை எம்.கே.சி. நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பொருட்காட்சிகளை பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இப்போது ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை 10 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி உள்ளோம். சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

இப்போது முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோ விலில் பொருட்காட்சி தொடங்கி உள்ளது. தினமும்

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டு கழித்து மகிழலாம். அக்டோபர் 30-ந்தேதி வரை 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியில் ஆழ்கடலில் குகை இருப்பது போல 200 அடி நீளத்தில் செட்டிங் அமைத்து அதில் 50 வகைகளுக்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான கடல் மீன்கள் சுற்றி வரும் அழகு குழந்தைகள் முதல் அனை வரையும் பார்த்து குதூகலம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள மீன்களை நேரில் பார்த்து ரசிப்பது போல இந்த கண்கா ட்சி அமைக்க ப்பட்டுள்ளது. குகைக்குள் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சி அரங்கிற்குள் ஏராளமான விளையாட்டு உபகரண பொருட்கள் கடைகள், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மை பொருட்கள் கடைகள், பேன்சி கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட ்களை வாங்கி செல்லும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஜெயண்ட் வீல் ராட்டினம், பிரேக் டான்ஸ் ராட்டினம், கொலம்பஸ் மற்றும் டிராகன் ராட்டினம், குழந்தைகள், சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சைனா டோரா டோரா, ஹனி பீ ராட்டினம் சன்மூன் ராட்டி னம் போன்ற வகைகளும், 3டி அரங்குகள், பேய் வீடு அர ங்கம் ஆகிய வையும் பிர மாண்ட அளவில் இடம்பெ ற்றுள்ளன.சுனாமி ராட்டினம் சிறுவர்களை குழந்தைகளை குதூகலப்படுத்தும் மேலும் இங்கே தின்பண்டங்கள் உணவகம், உணவு திருவிழா அரங்கமும், பொழுது போக்கு பூங்கா அரங்கமும் இடம்பெற்று ள்ளன.

பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளன. பொது மக்கள் சிறுவர், சிறுமிகள், குழந்தை கள் என அனைவரும் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை பார்த்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயனடை யும் படி எம்.கே.சி. நிர்வாகம் சார்பில் கேட்டு க்கொள்கிறோம்.

Tags:    

Similar News