உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-15 12:23 IST   |   Update On 2022-06-15 12:23:00 IST
  • தக்கலை அருகே பரிதாபம்
  • தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி :

தக்கலை அருகே அமலா கான்வென்ட் அருகில் வசித்து வருபவர் சதாசிவன் (வயது49). கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உண்டு. சதாசிவன் சரியாக வேலைக்கு செல்வதில்லை. மேலும் மது அருந்தும் பழக்கம் உண்டு.

இதனால் மனைவி பலரிடம் கடன் வாங்கி யுள்ளார். கடன் வாங்கிய வர்கள் இவரிடம் கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சதாசிவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற கொண்டு சென்றனர்.டாக்டர் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சம்மந்தமாக மனைவி சாந்தி தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News