உள்ளூர் செய்திகள்

துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

Published On 2023-10-16 09:38 GMT   |   Update On 2023-10-16 09:38 GMT
  • பிடித்தம் செய்த தொகையை திரும்பி வழங்க கோரிக்கை
  • கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக 92 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை பிடித்தம் செய்து வந்தனர். அந்த நிதியை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திரும்பி வழங்க கோரி இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து "திடீர்"என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் துப்புரவு பணிக்காக பயன்படுத்தும் மண்வெட்டி, கூடை மற்றும் உபகரணங்களை கையில் வைத்திருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழி லாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை திரும்பி வழங்கு வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News