உள்ளூர் செய்திகள்
மகாராஜபுரத்தில் குழந்தைகள் மருத்துவ முகாம்
- பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கி வைத்தார்
- 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்
கன்னியாகுமரி :
மகாராஜபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கிவைத்தார்.
பஞ்சாயத்து துணைத்தலைவர் பழனிகுமார், வார்டுஉறுப்பினர்கள் அனீஸ்வரி, சுயம்பு லிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் மருத்துவர் ஜாம்ஷீர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சிகிச்சை பெற்றனர்.