கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து; மீனவர் பலி
- 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பெரி யார் நகரை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 62), மீனவர். இவர் அஞ்சு கூட்டுவிளையை சேர்ந்த பீட்டர் (50) என்பவருடன் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வெளியில் சென்றார்.
கன்னியாகுமரி 4 வழிச்சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவித மாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மரியதாசன், பீட்டர் படுகாயம் அடைந்த னர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மரிய தாசன் இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து பீட்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மரியதாசனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது