உள்ளூர் செய்திகள்

இரும்பிலி, பனவிளை தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் 10 நாட்களுக்குள் இயக்கப்படும்

Published On 2022-09-17 07:20 GMT   |   Update On 2022-09-17 07:20 GMT
  • 2-வது முறையாக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
  • அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

குளச்சல், செப். 17-

குளச்சல் அருகே உள்ள இரும்பிலி, பனவிளை வழியாக இயங்கி வந்த தடம் எண் 5 ஜி வி, 9 ஜெ, 9 ஜி மற்றும் 88 டி அரசு பஸ்கள் கடந்த 3 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக வும் அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நிறுத்த ப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந் தேதி ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மறியல் போராட்டம் நடத்த ஊர்மக்கள் திரண்டனர். தகவலறிந்த குளச்சல் பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங், கண்காணிப்பாளர் ஜெய ராஜ், கண்ட்ரோலர் காந்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பஸ்கள் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.ஆனால் உறுதிமொழிப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் மீண்டும் மறியல் நடத்த பொதுமக்கள் முயற்சித்தனர். பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங் மாவட்ட லெனினிஸ்ட் செயலாளர் அந்தோணிமுத்துவிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் உறுதியாக பஸ்கள் இயக்கப்படும் என கூறியதை அடுத்து மீண்டும் அனை வரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News