உள்ளூர் செய்திகள்

சுங்கான்கடை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதியில் பஸ் நிறுத்தம்

Published On 2023-11-06 09:19 GMT   |   Update On 2023-11-06 09:19 GMT
  • மேயர் மகேஷ் ஆய்வு செய்து உத்தரவு
  • ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கை

நாகர்கோவில், நவ.6-

நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட சுங்கான்கடை பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அங்கு அரசு தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவரை பார்வையிட்ட அவர், அதனை சரி செய்யவும், பாலிடெக்னிக் கல்லூரி முன்புள்ள மழைநீர் வடிகால் ஓடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் பழுதுபட்டுள்ள குடிநீர் வால்வை மாற்றி அமைக்கவும், பொதிகை நகர் தெருவில் ஊற்று தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள பாசியை அகற்றி சரி செய்யவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பொதுபணித்துறைக்கு சொந்தமான குளத்தில் விழுந்து கிடக்கும் மரத்தை அதற்றவும், ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேயர் மகஷே் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு ஹவ்வா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை சீரமைப்பு பணி, 34 -வது வார்டு பார்க் ரோடு காமராஜர் தெரு மற்றும் என.பி. காலனி பகுதிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி, 16-வது வார்டு பரமேஸ்வரன் தெரு, கே.பி. ரோடு குறுக்கு சாலை, எம்.எஸ் ரோடு குறுக்கு சாலை பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம் குமார், நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் அணிலா, தினகரன், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர் ராஜேஷ் மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர்கள் ரவி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகிகள் சரவணன், வட்டச் செயலாளர் அப்துல் கரீம், ஜானகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News