உள்ளூர் செய்திகள்
கொய்யன்விளையில் காளை வண்டி போட்டி
- 15-ந்தேதி நடக்கிறது
- 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே கொய்யன்விளையில் காளை வண்டி போட்டி வருகிற 15-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தேவ் தலைமை தாங்குகிறார். காளை வண்டி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மீனாதேவ் தொடங்கி வைக்கிறார். கந்தப்பன், ராஜ மன்னார், காமராஜ், சுதர்சன், சிவபிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கொய்யன்விளை ஸ்ரீமன் நாராயணன் கோவில் அருகில் இருந்து தெற்கு சூரங்குடி தபால் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதல் பரிசாக ரூ.10,001 மற்றும் கேடயமும், 2-வது பரிசாக ரூ.6,501 மற்றும் கேடயமும், 3-வது பரிசாக ரூ.4,001 மற்றும் கேடயமும், 4-வது பரிசாக ரூ.2,001 மற்றும் கேடயமும் வழங்கப்படு கிறது.