உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சியில் கடல் நீர் நிறம் மாறியதால் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்

Published On 2023-03-28 09:42 GMT   |   Update On 2023-03-28 09:42 GMT
  • மீனவர் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
  • கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து மீனவர்கள் கூறிய தாவது:-

மணவாளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலின் நிறம் மாறி காணப்பட்டது. இதற்கு ஐ.ஆர்.இ. மணல் ஆலையிலிருந்து வெளி யேற்றப்பட்ட கழிவு தண்ணீர்தான் காரண மாகும். இதனால் மீன் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஐ.ஆர்.இ. மணல் ஆலையிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவர்கள் பயன்படுத்தும் விசை படகை புதுப்பிக்கும் காலம் ஏற்கனவே 3 ஆண்டுகள் என இருந்ததை ஒரு ஆண்டுகள் என மாற்றி உள்ளனர்.

இதனால் மீனவர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. விசைப்படகு புதுப்பிக்கும் காலத்தை மீண்டும் 3 ஆண்டுகள் என மாற்றி அமைக்க வேண்டும். சாவாளை மீன்களை பிடிக்க தடை விதிக்க வேண்டும். இழுவை வலை இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும்.

மீனவர்கள் நல வாரி யத்தில் பதிவு செய்த வர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.கடியப்பட்டினத்தில் குடிநீர் பிரச்சி னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி னார்கள்.

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

மணவாளக்குறிச்சி பகுதியில் கடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த தண்ணீரை ஆய்வு க்காக தற்போது அனுப்பி உள்ளோம்.

ஏற்கனவே ஐ. ஆர். இ. மணல் ஆலையிலிருந்து கடலில் விடும் தண்ணீரால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட த்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு மண்ணை சுத்தம் செய்யும் போது வெளி வந்த தண்ணீரின் காரணமாகத்தான் கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

Tags:    

Similar News