உள்ளூர் செய்திகள்

மணப்பாடு கடலில் மீட்கப்பட்ட மற்றொரு மீனவர் உடல் படகில் குளச்சல் வந்தது

Published On 2023-10-09 07:32 GMT   |   Update On 2023-10-09 07:32 GMT
  • கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர்
  • பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.

குளச்சல் :

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆ ரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 28-ந்் தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது.

இந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆராக்கியம் மற்றும் ஆன்றோ கடலில் மூழ்கினர். இவர்களில் பயசின் உடல் கடந்த 30-ந் தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, ஆரோக்கியத்தை மீனவர்கள் தேடி வந்தனர்.மேலும் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதற்காக விசாகப்பட்டணத்திலிருந்து கப்பற்படை கப்பல் நேற்று மணப்பாடு கடல் பகுதிக்கு சென்றது.

பின்னர் வீரர்கள் தேடும் பணியில் ஈடு்பட்டனர். அப்போது மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அது யார் என அடையாளம் காணமுடியவில்லை.

மீட்கப்பட்ட உடல் விசைப்படகு மூல மாக குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு இன்று(திங்கள்கிழமை)காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மீட்கப்பட்ட உடலை காண குளச்சல் துறைமுகத்தில் உறவினர்கள் திரண்டிருந்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.

ஒருவேளை பிரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாவிட்டால்.டி.என்.ஏ.சோதனை மூலம் அடையாளம் காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News