உள்ளூர் செய்திகள்

தெங்கம்புதூர் பகுதியில் 2 கோயில்களை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

Published On 2022-07-24 09:18 GMT   |   Update On 2022-07-24 09:18 GMT
  • மேயர் மகேஷ் தகவல்
  • 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில்கள் திருப்பணிக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது.

குமரி மாவட்டத்திலும் கோவில்கள் திருப்பணிகள் செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில்களில் புரணைப்பு பணிகளை மேற் கொள்வது தொடர்பாக நாகர்கோவில் மேயரும் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் கிழக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் உள்ள பல் வேறு கோவில்களில் நடை பெற்று வரும் பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று தெங்கம் புதூர் பகுதியில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தெங்கம் புதூர் தானு லிங்க சுவாமி கோவில், தெங்கம்புதூர் மறுகால் தலை கண்டம் சாஸ்தா கோயில்களில் அவர் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

குமரி மாவட்டத்தில் கோயில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் கோவில்களில் புரணைப்ப பணிகள் நடந்து வருகிறது. தெங்கம் புதூர் தானூலிங்கசாமி கோவிலில் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதே போல் மறுகால் தலை கண்டன் சாஸ்தா கோவிலில்ரூ. 15 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

கோவில்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்ட பிறகு புரணைப்பு பணிகள் அனைத்தும் நடைபெறும். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News