அஞ்சுகிராமத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது
கன்னியாகுமரி :
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலா ளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், அழகப்பபுரம் பேரூர் செய லாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதி குமார் என்ற கண்ணன், ஊராட்சி கழக பொறுப்பா ளர்கள் லீன், செல்லப்பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜ பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரி விப்பது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜெஸீம்-க்கு நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை இந்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், வடக்கு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறை வேற்றப் பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் லெட்சுமணன், செல்லம்பிள்ளை, வீரபத்தி ரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.