உள்ளூர் செய்திகள்
- 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி வெள்ளங்கட்டி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாண்றோஸ் (வயது 76). இவரது மகன் ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ராஜசேகருக்கு சந்தியா (26) என்ற மனைவியும், ஷாட்லின் ஷான் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 18-ந் தேதி மாலையில் சந்தியா தனது குழந்தையுடன் கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதையடுத்து ராஜ சேகரின் தந்தை ஜாண் றோஸ் மருமகளையும், குழந்தையையும் கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சந்தியா குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.