உள்ளூர் செய்திகள்
விஷ பாம்பு பிடிப்பட்டபோது எடுத்த படம்
கன்னியாகுமரியில் வீட்டின் மின் மீட்டரில் புகுந்த விஷபாம்பு
- வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
- வன காவலர் பிரவீன் சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். இவரது வீட்டின் மின்மீட்டரில் பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வேட்டை தடுப்பு வன காவலர் பிரவீன் அங்கு விரைந்து வந்தார்.அவர் மின்வாரிய ஊழியர் சதீஷ்குமார் துணையுடன் மின்மீட்டரில் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.
பின்னர் அவர் அந்த விஷபாம்பை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு போய் விட்டார்.