உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு "சீல்"

Published On 2023-08-28 07:33 GMT   |   Update On 2023-08-28 07:33 GMT
  • 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
  • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்"

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொட்டாரம் பகுதியில்உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

Tags:    

Similar News