உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 60 சிறப்பு பஸ்கள்
- முதல் கட்டமாக 60 பஸ்கள் ஒதுக்கப்பட்டு இன்று முதல் இந்த பஸ்கள் இயத்கப்பட்டன.
- கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை
நாகர்கோவில், நவ.8-
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதேபோல் வெளியூரைச் சேர்ந்த பலர் குமரி மாவட்ட த்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
இவர்களது வசதிக்காக போக்கவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூரூ, கோவை, திருச்சி, வேளாங்கண்ணி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்காக முதல் கட்டமாக 60 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த பஸ்கள் இயத்கப்பட்டன. வரும் காலங்களில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.