உள்ளூர் செய்திகள்

கேரளாவுக்கு வேனில் கடத்தப்பட்ட 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-07-15 07:32 GMT   |   Update On 2023-07-15 07:32 GMT
  • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
  • கல்குளம்

கன்னியாகுமரி :

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் பணியா ளர்கள், பார்வதிபுரம் பகுதி யில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேனை நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.

உடனே அதிகாரிகள் அந்த வேனை விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தோட்டியோடு என்னுமி டத்தில் வேனை மடக்கினர். அப்போது வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் அதிகாரிகள் வேனை சோதனை செய்த னர். அப்போது அதில் நூதனமாக மறைத்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப் படுவது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

4 டன் ரேஷன் அரிசி வேனில் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, தமிழ் நாடு அரசு உணவு பொருள் வாணிப கழக உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வேன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரேசன் அரிசி கடத்தியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News